2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

Thipaan   / 2017 ஜூலை 07 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் உப -பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடமிருந்து 20,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, அதே பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (06) உத்தரவிட்டது. 

கொழும்பு, காலி முகத்திடலில் வைத்து பணத்தைப் பெற்றபோதே, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள சீன கட்டுமான நிறுவனமொன்றின் குப்பைகள், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கொட்டப்பட்டமை தொடர்பில் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக 1 இலட்சம் ரூபாய் வழங்குமாறு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் உப-பொலிஸ் பரிசோதகர், சீன கட்டுமான ஊழியர்களிடம் இலஞ்சம் கோரியுள்ளார். 

இது தொடர்பில், சீன கட்டுமான ஊழியர்களால், பொலிஸ் தலைமையகத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை மீளப்பெறுவதற்கு உதவதாகக் கூறியே, கான்ஸ்டபிள், 30,000 ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளதுடன், உப பரிசோதகர் 20,000 ரூபாயை கொடுத்தபோதே, தாம் அவரைக் கைதுசெய்யதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், மன்றில் தெரிவித்தனர். 

உப-பரிசோதகரிடம், தமது சேவை பெறுநர் 30,000 ரூபாயைக் கடனாக் கோரியிந்ததாகவும் 20,000 ரூபாயைக் கொடுத்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டார் என்றும், கான்ஸ்டபிள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மன்றில் குறிப்பிட்டார். 

இது தொடர்பில், சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரிடம் வாக்குமூலம் பெறுமாறு, ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, அவரை இன்று(07) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X