Editorial / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பத்தேகம, காமிங்கல பகுதியைச் சேர்ந்த மெரெஞ்சி கங்கானம்கே பிரசாத் மனோரஞ்சன (என்கிற) 'களுத்துறை சூட்டி' என்பவராவார். இவர் இந்த வழக்கின் நான்காவது பிரதிவாதியாவார்.
இந்த வழக்கின் முதல் பிரதிவாதியான ஹப்புகலகே நிலந்தி, இரண்டாவது பிரதிவாதியான குநெத்திகொட லீலாவதி (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் மூன்றாவது பிரதிவாதியான ரணசிங்க பத்திரனகே பியந்தி ஆகிய மூவரும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி அல்லது அதனை ஒட்டிய ஒரு தினத்தில், பத்தேகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிள் திலீப் குமாரசிங்க (15615) மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஜகத் நந்தன (50472) ஆகிய இருவரும் காமிங்கல பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பலபிட்டிய ரந்தொம்பே பகுதியைச் சேர்ந்த திலீப் குமாரசிங்க உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களுக்கு எதிராகப் பத்தேகம பொலிஸஸாரால் பலபிட்டிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அரசாங்க சட்டத்தரணி செனூரி குணதிலக்க இந்த வழக்கை வழிநடத்தியதுடன், பத்தேகம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உடுகமசூரிய விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .