Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தலவத்துகொடையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எச். ஜனகாந்தவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பார்வையிட்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பாராளுமன்ற நுழைவு வீதிக்குள் நுழைய முற்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், வீதி தடுப்பைத் தூக்கி எறிந்தபோது, அதனை தடுக்க முயற்சித்த போதே பொலிஸ் அதிகாரி காயமடைந்திருந்தார்.
குறித்த பொலிஸ் அதிகாரியின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டிருந்ததுடன், அதற்காக, மூன்று மணி நேர சத்திர சிகிச்சை செய்யப்பட்டடிருந்தது.
இந்தநிலையிலேயே அவரைப் பார்வையிடச் சென்றதுடன், அங்கு சுமார் 10 நிமிடங்கள் தங்கியிருந்த அமைச்சர , ஓ.ஐ.சி விரைவாக குணமடைவதற்காக பிரார்த்தித்துச் சென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago