Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Amirthapriya / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள வளிமண்டலவியல் குழப்பம் காரணமாக, அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை கொண்ட வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி, க.சூரியகுமாரன் தெரிவித்தார்.
இதன்படி, இன்று (04) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வடமேற்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில பகுதிகளிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய கடற்கரையோரப் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் முதல் புத்தளம், கொழும்பு, காலி ஊடான மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் அதிக மழை காணப்படும். அத்தோடு, காற்றின் வேகமானது மணிக்கு 15 முதல் 20 கிலோமீற்றர் வரை வீசுவதுடன், இச்சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென்பதால் கடலானது தற்காலிகமாக கொந்தளிப்பாக காணப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago