Freelancer / 2025 மே 28 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களுக்கும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 40 - 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடுமெனவும், சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 - 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் குறித்த கடற்பிராந்தியங்களுக்கு, மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சில சந்தர்ப்பங்களில் கடல் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. R
24 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
52 minute ago
59 minute ago