Editorial / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் நாட்களில் நாட்டின் காலநிலை நிலவரம் தொடர்பில் முழுமையான அறிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும், மோசமான வானிலை நிலவும் பட்சத்தில் வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், அதற்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும் வளிமண்டலவியல் திணைக்களத்திடம் அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதவிர, வௌ்ளிக்கிழமை (20ம் திகதி) பிற்பகல் 3:30 மணிக்கு பின்னர் மூன்று மணிநேரத்துக்கு ஒரு தடவை வானிலை அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதற்கிடையில், மோசமான வானிலை மற்றும் பேரிடர்களால் வாக்குப்பதிவு தடைபடுவதைத் தடுக்க தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் திடீர் வெள்ளத்தை சமாளிக்க படகுகள் தயார் செய்யுமாறு கடற்படைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
7 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago