S.Renuka / 2025 நவம்பர் 30 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட பரீட்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக, இந்தச் செய்தி முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே, பரீட்சைகள் தொடர்பான விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட 1911 என்ற தொலைபேசி எண்ணுக்குப் பரீட்சைகள் தொடர்பான விசாரணைகள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால், இதை ஊடக நிறுவனம்/வலைத்தளம்/சமூக ஊடகங்களில் வெளியிட்டு, தொடர்ந்து பரவலான விளம்பரம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago