2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய சந்திப்பு.

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர்களின் கோரிக்கைகள் இதுவரையில் அரசியலாக்கப்பட்டுள்ளதே தவிர, அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தரப்பினர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மஹாநாயக்க தேரர்களை சந்தித்து  கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, இளைஞர்களின் கோரிக்கைகள் இதுவரையில் அரசியலாக்கப்பட்டுள்ளதே தவிர, அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தை பௌத்த விரோத செயற்பாடாக காண்பிக்க சிலர் முற்படுவதாகவும், மதரீதியான பிரிவினைக்கு இளைஞர்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் குறித்த தரப்பின்னர் மஹாநாயக்கர்களிடம் குறிப்பிட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .