Editorial / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

காலி மாநகர சபையில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
சபை நடவடிக்கைகளை மாநகர மேயர் ஆரம்பித்தவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது.
இதன்போது, "திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்" என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.
இந்த கோஷங்களுக்கு மத்தியில் விசேட பொதுச் சபைக் கூட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை மேயர் முன்னெடுத்துச் சென்றார். எனினும், அதன் பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டவுடன், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார். இந்த தாக்குதலில் பெண் உறுப்பினர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago