2026 மே 09, சனிக்கிழமை

dd

கிரேன்பாஸ் நாகலகம் பகுதி முடக்கம்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரேன்பாஸ் நாகலகம் பகுதியில், கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதையடுத்து,  குறித்த பகுதியை இன்று (16) முதல் முடக்க பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அத்துடன், குறித்த பகுதிக்குப் பிரவேசிக்கும் வீதியும் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக, இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய, கொழும்பு-குணசிங்கபுர, வேல்லவீதி, கிரேன்பாஸ் மற்றும் நாகலகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பேர் நேற்று (15) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .