Editorial / 2017 நவம்பர் 09 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை இலக்குவைத்து, ‘கிளைமோர்’ குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு, 30 பேரை பலியெடுத்ததுடன், 42 பேருக்குப் படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினரொருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரணசிங்ஹ, உயிர்வாழும் வரை கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.
பிலியந்தலையில், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே, அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவருக்கு எதிராக 94 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அதில், 93 குற்றச்சாட்டுகளுக்கு, தனித்தனியாக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதேவேளை, பஸ்ஸூக்குச் சேதம் ஏற்படுத்திய குற்றத்துக்காக,அவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆனந்த சுபார் அல்லது லோரன்ஸ் டேவிட் ராஜ் என்றழைக்கப்படும் வசந்தன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தேவேந்திரன் சின்னையா என்ற மற்றுமொரு புலி உறுப்பினர், வழக்கு விசாரணையின் போதே மரணமடைந்துவிட்டார்.
41 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago