Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாலித ஆரியவன்ச
எங்களுடைய ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவும் கீறிப்பிள்ளையும் நாகபாம்பும் போல இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையில், வைராக்கியம் தற்போதில்லை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா, அதுதான் அரசியலாகும்.
லங்கா பொதுஜன பெரமுனவினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருடன் இன்னும் வைராக்கியமாக இருக்கின்றனர் என்றார்.
ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக நியமித்தார். அதிலோர் அன்பு இருக்கின்றது. எனினும், ஆதரவாளர்களிடத்தில் அவ்வாறான அன்பு எதுவுமே இல்லை என்றும் தெரிவித்தார்.
பதுளை நகர மண்டபத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சிக்கு நாங்கள் சென்றது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு அல்ல. சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு, நிறைவேற்றக்குழு மற்றும் அகிகல இலங்கை செயற்குழு ஆகியனவற்றின் அனுமதியுடனேயே ஆதரவளித்தோம் என்று தெரிவித்த அவர், தனித்தீர்மானமின்றி, பொதுத்தீர்மானத்துடன் நல்லாட்சிக்குச் சென்றமையால், கிராமத்தின் எழுச்சி வேலைத்திட்டத்தின் ஊடாக, ஆகக்கூடிய 78 வேலைத்திட்டங்களை பதுளை மாவட்டத்துக்கு செய்யக்கூடியதாய் இருந்தது.
அது ஒரு தெளிவற்ற பண்பாகும். புளிப்பான செறிமானமில்லாத உணவை உண்டோமானால், அதில் அரைவாசிக்கு அரைவாசி கழிவாகிவிடும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago