Freelancer / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்தார்.
நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு நேற்று திங்கட்கிழமை வாழைக்குலையைக் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தார். இதன்போது அவர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. (a)
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago