Janu / 2026 மே 21 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் அமைந்துள்ள ரணவிரு (மாவீரர்) நினைவு முன்றலுக்குள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்குத் தலங்கம பொலிஸார் அவசரக் கட்டளை ஆணை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன்படி, நாளை (22) வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்குத் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்டி, போவல பகுதியைச் சேர்ந்த பஹல வலவ்வ அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் செனரத் பண்டார கொஹோன என்பவரால் தலங்கம பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட உத்தியோகபூர்வப் புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் நாளை முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த கட்டளை ஆணை உத்தரவின்படி, பிரதிவாதியான விமல் வீரவன்ச நாளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகத் தவறும்பட்சத்தில், இலங்கைத் தண்டனைச் சட்டக் கோவையின் 172ஆம் பிரிவின் கீழ் (பொலிஸ் உத்தரவை மீறியமைக்காக) அவருக்கு எதிராகத் தண்டனை வழங்குவதற்கேற்ப, எதிர்வரும் 26ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவுப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகச் சட்டவிரோதமாகக் கூடுதல் (அத்துமீறிய கூட்டம்), அத்துமீறி நுழைதல் மற்றும் அரச அதிகாரிகளின் கடமைக்குத் தடை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தலங்கம பொலிஸாரால் நேற்று (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முதற்கட்டக் கருத்துப் பதிவுகள் மற்றும் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

24 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
56 minute ago