Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சித் தேர்தல்களில் பொதுமக்களின் ஆர்வம் மிகக் குறைவாக இருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான மக்களுக்கான தேசிய இயக்கம்(பஃபரல்) அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலை காரணமாக வாக்களிப்பு குறைவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மற்ற முக்கிய தேர்தல்களைப் போலல்லாமல், உள்ளூராட்சித் தேர்தல்களில் வாக்களிப்பு சதவீதம் பொதுவாக 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கும் என்று கூறிய ஹெட்டியாராச்சி, விரிவான தேர்தல் பிரச்சாரம் இல்லாதது, தேர்தல் பிரச்சாரப் பொருட்களை காட்சிப்படுத்தாதது மற்றும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிக அளவில் கூடாதது ஆகியவை தேர்தலுக்கான உற்சாகமின்மைக்கு முக்கிய காரணங்களாகும் என்று கூறினார்.
இருப்பினும், தேர்தல் நெருங்கும் போது உற்சாகம் ஓரளவு அதிகரிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து எந்த ஒரு கடுமையான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று பஃபரல் அமைப்பு கூறுகிறது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளில் நாடு முழுவதும் சுமார் 4,000 தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
54 minute ago