2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

குணபாலவின் உயிரை இரண்டாவது தடவையில் பறித்த எமன்

Editorial   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 என்.ஆராச்சி

புளத்கொஹுபிட்டிய- நெவிஸ்மியர் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு தடவைகள் மரணித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள ரம்புட்டான் தோட்டத்தில் பல வருடங்களாக காவலாளியாக பணியாற்றிய குணபால, மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால், சில வருடங்களுக்கு முன்னர், அவரது மனைவி, தனது இரு பிள்ளைகளுடன் கணவனைப் பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், ரம்புட்டான் தோட்டமொன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்த இவர், சிறிய குடிசையொன்றில் தனிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

வழமைப்போல் இந்த மாதம் முதலாம் திகதி, காலை 7.30 மணியளவில் குறித்த நபர் வேலைக்கு வராததால், ரம்புட்டான் தோட்டத்தின் உரிமையாளர், காவலாளியின் வீட்டுக்குச் சென்று யன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார்.

இதன்போது காவலாளி கட்டிலிலிருந்து வீழ்ந்த நிலையில் இருந்துள்ளதை அவதானித்த உரிமையாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் புளத்கொஹுபிட்டிய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் காவலாளியின் உறவினருக்கும் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் சந்தேகநபர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தில் எவரும் வீட்டுக்கு உள்ளே செல்ல முன்வராததுடன், திடீர் மரண விசாரணை அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து, உள்ளே செல்லாமலேயே யன்னல் வழியாகவே தனது மரண விசாரணைகளை நடத்தி, மாலை 4 மணிக்கு காவலாளி  புளத்கொஹுபிட்டிய நகரில் உள்ள மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு கொண்டு சென்றதன் பின்னரே அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 1990 என்ற அவசர அம்பியூலன்ஸில் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குணபால என்ற அந்த காவலாளி அங்கு 4 நாள்களின் பின்னர் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X