2025 மே 01, வியாழக்கிழமை

குண்டுவெடிப்பு வழக்கில் மைத்திரிபால சிறிசேன சாட்சியம்

J.A. George   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த வழக்கில் முதல் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

2008 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் நோக்கில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜரானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .