Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 27 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைதுசெய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க எம்.பி தொடர்பில் தான் எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பின்னிற்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பின்பற்றப்பட்ட சம்பிரதாயங்கள், சம்பிக்கவின் கைதில் பின்பற்றப்படவில்லையெனத் தெரிவித்துள்ள சபாநாயகர், அவருடைய நலனை விசாரிப்பதற்காக சிறைச்சாலைக்குச் சென்றிருந்தமையை சில தரப்பினர் விமர்சனங்களுக்கு உட்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேற்படி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்திருக்கும் சபாநாயகர், சாதாரண காரணங்களுக்காக கைது செய்வதில் எவ்விதமான விவாதமும் இல்லையெனத் தெரிவித்த அவர், ஆனால், முறைமையை பின்பற்றியிருக்கவேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட எம்.பிக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள், எவ்வாறான அரசியல் பின்னணியைக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் பார்க்காமல் முறைமையைப் பின்பற்றியிருந்தனர் எனத் தெரிவித்துள்ள அவர், இது அவர்களின் மனசாட்சிக்குச் சாட்சியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் கைதுசெய்யப்பட்டு, 50 நாள்களுக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்படும் போது, அவர்களின் சிறப்புரிமைகளை மீறிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
“எம்.பிகளின் சிறப்புரிமையைப் பாதுகாப்பதற்கு ஒருபோதும் பின்னிற்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ள அவர், விமர்சனங்கள், சவால்களுக்கு மத்தியில், பொறுப்பை நிறைவேற்றி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, தொடர்ந்தும் அர்ப்பணிப்பேன்” என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago