2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்

Janu   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன்  செவ்வாய்க்கிழமை (02) காலை  அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

மலத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.   

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு  இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X