Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஷட் சாஜஹான்
கடந்த 23ஆம் திகதி குவைட் நாட்டில் பணிபுரிந்த இலங்கைப் பெண்ணொருவர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இறந்த பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குவைத்தில் பணிப் பெண்ணாகச் சென்ற பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமான நிலையில், பெண்ணின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை (30-11-2018) காலை விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று (1) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பிரேத பரிசோதனையின் போது குறித்தப் பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இறந்த பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
வெயாங்கொடை , மாரபொல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய, இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்..
குறித்த பெண் நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்ணாக தொழில் செய்துள்ளார். இந்த வருடம் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி குவைத்துக்கு பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் பணி செய்யும் வீட்டில் தனக்கு பிரச்சினை உள்ளதாகவும், தான் அங்கு கொடுமை செய்யப்படுவதாகவும் அவர் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23-11-2018 அன்று அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டு, சடலமும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
3 hours ago