Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 31 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.ஜீ. கபில
குஷ் (kush) என்ற பெயரிலான மேம்படுத்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான ஹைபிரிட் கஞ்சாவை, மிகவும் சூட்சுமமானமுறையில் இலங்கைக்கு எடுத்துவந்த ஈரான் நாட்டுப் பெண்ணொருவர், இன்று அதிகாலை (31) கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய கட்டடக் கலைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் வடபகுதி மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்துகுஷ் மலையை அண்மித்த பகுதியில் இவ்வாறான கஞ்சா, 1970 ஆம் ஆண்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதற்கு குஷ் என பெயரிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண், ஈரானிலிருந்து கட்டார் சென்று அங்கிருந்து, ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 668 என்ற விமானத்தில் நேற்று அதிகாலை (31) கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த பெண் தனது பயணப் பையில் மிகவும் சூட்டுமமானமுறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கஞ்சாவானது, இடலங்கையில் காணப்படும் கஞ்சா வகைகளை விட அதிக போதையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றென, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண் இலங்கைக்கு வந்துள்ளமை இதுவே முதற் தடவை எனவும், இத்தகை கஞ்சா இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago