2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கெஹலிய, ஜயம்பதிக்கு நோட்டீஸ்

Kogilavani   / 2017 ஜூன் 14 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

முன்னாள் வெகுசன ஊடக அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்தவுக்கும், கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நோட்டீஸ் பிறப்பித்து, நேற்று (13) உத்தரவிட்டார்.

2010ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதிக்கும் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் 75 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்த, ஹோட்டல் கட்டணம், ஊக்குவிப்புத் தொகை என்று குறிப்பிட்டு வவுச்சர்கள் மூலம் 74.4 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என்று, ஆணைக்குழுவினரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெலவின் ஒருமாத  தொலைபேசிக் கட்டணமான 40,000 ரூபாய்க்காக, ரூ.230,984.15ஐ, வவுச்சர் மூலம் பெற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் எதிராக 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோதே, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார  மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்ததுடன், இருவரையும் ஜூலை 17ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .