R.Maheshwary / 2021 ஜூன் 27 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
பேஸ்புக் ஊடாக அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில், இருவர் கடத்திச் செல்லப்பட்டு, பாரதூரமான முறையில் கொடுமைப்படுத்தப்பட்டமை தொடர்பில், பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு அவமானப்படுத்திய இருவரையும் வீட்டுக்கு அழைத்து, அவர்களை அம்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கைகளை பலகையின் நடுவில் வைத்து, ஆணி அடித்துள்ள சம்பவம் நேற்று முன்தினம் (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 30 வயதுடைய நபர், அம்பிட்டிய மற்றம் மேலும் சில பிரதேசங்களில் தேவாலயங்களை நடத்திச் செல்பவரென்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் இருவருவரும் சந்தேகநபரின் நண்பர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களான 4 பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 44வயதுடைய நபரும் கடுவல- பொம்பிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவரும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago