2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கைதானவர் வழங்கிய அதிர்ச்சி தகவல்

Freelancer   / 2025 ஏப்ரல் 18 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர் தெரிவித்த தகவலின்படி, T56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், ஒரு கூர்மையான ஆயுதத்தையும் அதுருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி அதுருகிரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த சந்தேகநபர்  11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ்  போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கப்பட்ட போது இந்த வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் நேற்று (17) மீட்கப்பட்டன.

சந்தேக நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X