Simrith / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் புதன்கிழமை (11) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர்.
துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படாத நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் தாதி உத்தியோகத்தர், ஆண் தாதி உத்தியோகத்தர் ஆகிய மூவரை உடனடியாக கைது செய்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல மன்று அனுமதிக்க வேண்டும் என சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில், அடுத்த வழக்கில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்த நீதிபதி ஏ ஏ.ஆனந்தராஜா வழக்கை நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு தவணையிட்டார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago