Freelancer / 2026 ஜனவரி 05 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொத்மலை, தவலந்தன்ன - ரம்பொடை வெவண்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை, கொத்மலை, தவலந்தன்ன பகுதியில் அமைந்துள்ள தொண்டமான் கலாசார மத்திய நிலையத்தில் தற்காலிகமாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்தார்.
ரம்பொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு வெவண்டன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகிலேயே ஆரம்பமாகியுள்ளது.
பாடசாலைக்குச் செல்லும் வீதியின் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் அவர்களின் மனநிலையையும் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொண்டமான் கலாசார மத்திய நிலையத்தில் போதுமான இடவசதி காணப்படுவதால், அங்குள்ள கட்டடங்களில் வகுப்பறைகளை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை கொத்மலை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் சில நாட்களில் அங்கு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலையில் தரம் 1 முதல் தரம் 11 வரை 143 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 13 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். R
24 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
6 hours ago