Freelancer / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இதுவரை "குழந்தைகளில் பல அமைப்பு அழற்சி" என்று அழைக்கப்படும் கொரோனாவுக்கு பின்னரான நோயால் சுமார் 34 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தற்போது அத்தகைய ஐந்து குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் வைத்திய நிபுணர் நலின் கித்துல்வத்த தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 34 குழந்தைகளில் 21 பேர் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இருந்து பதிவாகியுள்ளனர் என்றும் ஆறு பேர் கராப்பிட்டிய வைத்தியசாலை மற்றும் நான்கு பேர் கண்டி தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், தியத்தலாவ, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய நோயாளிகள் பதிவாகியுள்ள மற்ற பகுதிகளுக்கும் இந்த நோய் இப்போது பரவியுள்ளது என்றும் தெரிவித்தார்.
எந்த கொரோனா மாறுபாட்டாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கொரோனாவில் இருந்து குணமடைந்த இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பின்னர் இந்த அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.
இந்த நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு சதவீதம் பேர் இறக்க நேரிடும் என்று கூறிய அவர், சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு வந்தால் குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்று வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தக் கசிவு, தோல் சொறி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்றும் இது குணப்படுத்தக்கூடிய நோய் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய நோய்க்குறி இப்போது பெரியவர்களிடமும் பதிவாகியுள்ளது, 40 வயதுக்குட்பட்ட இருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.
பெரியவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் மற்றும் கடுமையான வயிற்று வலியுடன் இந்த நோய்க்குறியை உருவாகலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
5 minute ago
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
13 minute ago
17 minute ago