2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்றுடைய பெண்ணின் குடும்பத்தாருக்கு தொற்று இல்லை

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

ஆனமடுவ- கிவுல பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுடைய பெண்ணின் மகன்; மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், இன்று (09) சிலாபம் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனரென, ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி பத்மினி அபேசிங்க தெரிவித்தார். 

இவர்கள் தங்களின் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்துலுக்கு உட்படத்தப்பட்டிருந்த நிலையில், பிரசோதனைக்காக, இன்று 09) அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கிவுல பிரதேசத்தைச் சேர்ந்த பெண், கடந்த 65 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் கணவன், மகன் மற்றும் குடும்ப உறவினர்கள் இருவர் 7 ஆம் திகதி, மருத்துவ பரிசோதனைக்காக  ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும், இவர்களை தொடச்சியாக கண்காணித்து வந்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறிகளும்  தென்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இக் குடும்பத்தாரை தொடந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .