Editorial / 2021 ஜனவரி 07 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா. நிரோஸ
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையோ அல்லது அதன் ஒருபகுதியையோ வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர், கொழும்பில் நிற்கும் சூழ்நிலையில், பாராளுமன்றத்தில், 'பிரதமரிடம் கேளுங்கள்' நேரத்தில், ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியான அநுரகுமார திஸாநாயக்கவால், கொழும்புத் துறைமுகம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'கொழும்புத் துறைமுகத்தில் ஏற்பட்டிருக்கும் கப்பல் தரித்துநிற்கும் நெரிசல் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் முழு பகுதியையோ ஒரு பகுதியையோ அல்லது அதை நிர்வகிக்கும் பொறுப்பையோ வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு, அரசாங்கத்தால் எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை' என்றார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026