Editorial / 2022 மே 09 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்து என்ன? நடக்கும் என்றெல்லாம் பலரும் தலையைப் போட்டு பிய்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கொழும்பு அரசியலில் இவ்வாரம் தீர்மானம் மிக்கதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வௌ்ளிக்கிழமை (06) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் என்றும், அதன்பிரகாரம் இராஜினாமா கடிதத்தில் பிரதமர் கையெழுத்திட்டார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதி கேட்டுக்கொண்டதை, அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தவர்கள் உறுதிப்படுத்திய போதிலும், ஜனாதிபதி அவ்வாறு எந்தவிதமான கோரிக்கையையும் விடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவும் கைச்சாத்திடவில்லையென பிரதமர் தரப்பு விளக்கமளித்திருந்தது.
இன்று (09) திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முக்கிய அறிவிப்பொன்றை விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே எதிர்பார்ப்பு, கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இருந்தது. எனினும், பிரதமர் எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.
இதற்கிடையே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை சஜித் நிராகரித்துவிட்டார்.
சஜித் ஏற்றுக்கொள்ளாவிடின் தாங்கள் தயாரென, அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் சுயாதீனமாக இயங்கும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்பன்பில தெரிவித்திருந்தனர்.
எனினும்,சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைக்கு இணங்க இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்போமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இதற்கிடையே சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் ஜனாதிபதி மாளிகையில், நேற்று (08) மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago