Freelancer / 2021 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்றைய நிலவரப்படி, 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவம் தெரியவருகின்றது.
கடந்த மே மாதம் முதல் துறைமுகத்தில் பிசிஆர் ஆய்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், துறைமுக ஆணையத்தில் பிசிஆர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், ஏராளமான நோயாளிகளைக் கண்டறிய முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
துறைமுகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா இரண்டாவது தடுப்பூசியின் அதிகப்படியான அளவு காரணமாக துறைமுக ஊழியர்களிடையே கொரோனா பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும்
சுதந்திர துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் லால் பெங்கமுவ தெரிவித்தார். R
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago