Editorial / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் பல நாடுகளில் தற்போது பரவிவரும், 'கொவிட்-19 மாறி' இன் தாக்கம், இலங்கையையும் ஆக்கிரமிக்குமா என்பது தொடர்பான விசேட ஆய்வு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மானிடவியல் மற்றும் உயிரணு உயிரியல் பிரிவால் இந்த விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
'இலங்கையில் முன்னெடுக்கப்படும் சாதாரண பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம், கொரோனா வைரஸ் தொற்றை அடையாளம் காணமுடியும்' என்றார்.
எனினும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, உலகம் முழுவதும் பரவி வரும் புதிய வைரஸின் தாக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிய, தனிமரபணுப் பரிசோதனை தேவையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் புதிய தொற்றுக் குறித்து, சரியாக அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுகளுக்கு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது இந்தப் புதிய தொற்று, இலங்கைக்குள் வந்துவிட்டதா என்பதை அறிவதற்காக, பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்களின் மாதிரிகளைப் பெற்றுள்ளதாகவும் ஒவ்வாமை மானிடவியல் மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய தொற்றானது, பிரித்தானியாவிலும் தென்ஆபிரிக்காவிலும் வேகமாகப் பரவி வரும் அதேவேளை, 23 நாடுகளுக்கு, இப்புதிய கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவிட்ஸ்லாந்து, சுவீடன், பின்லாந்து, அயர்லாந்து, ஜேர்மன், ஐஸ்லாந்து, பெல்ஜியம், சிங்கப்பூர், ஜப்பான், ஹொங்கொங், தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இப்புதிய வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல், லெபனானுக்கும் இத்தொற்று பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிலும் இத்தொற்று பரவியுள்ள நபர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.
13 minute ago
22 minute ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
26 Apr 2026
26 Apr 2026