Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கை, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக விசேட மேல் நீதிமன்றம், இன்று (01) அறிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட அவரது தந்தை டீ.ஏ.ராஜப க்ஷ அருங்காட்சியகத்துக்கு, அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கோட்டாபய உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
வழக்கு விசாரணை, விசேட மேல் நீதிமன்றத்தின் தலைவர் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் மன்றில் இன்றைய தினம் ஆஜரான சட்டத்தரணிகள், தமது தரப்பு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட முறை தொடர்பில் அடிப்படை எதிர்ப்பை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வழக்கினை மார்ச் மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக அறிவித்த நீதிமன்றன், அன்றைய தினம் எதிர்ப்பு மனுவினை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ, பிரசாத் ஹர்ஷான் டி சில்வா, உதுலாவதீ கமலதாச, கேமிந்த ஆட்டிகல, சமன் குமார கலப்பதி, தேவக மகிந்த சாலிய, ஸ்ரீமதி மல்லிகா குமார சேனாதீர ஆகியோர் மீது குறித்த நிதிமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
7 hours ago