Editorial / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமைக்கான ஆவணங்களைக் கேட்டால் அதனை ஒப்படைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை குறித்து, அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தனது டுவிட்டரில் பதிவிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ இதனைப் பதிவிட்டுள்ளார்.
“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவரது ஆவணங்கள் தொடர்பில் பிரச்சினை என்றால், தேவைப்பட்டால் அதனை முன்வைப்போம். நீங்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்று கவலைப்படுங்கள்” என, நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஓகஸ்ட் 11ஆம் திகதி அறிவித்தது.
9 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago