Freelancer / 2022 ஜூலை 09 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களின் வாக்கெடுப்புக்கு பணிந்து பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும், பிரதமரும் பதவி விலக வேண்டும் எனவும், அதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அனைத்துக் கட்சிகளையும் அழைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை நீதிக்காக போராடும் மக்களே ஆக்கிரமித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதே தமது ஒரே கோரிக்கை எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அந்த பதவியை வகிக்க ஆணை இல்லாததால் அதனை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்வதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாகும் என அவர் குறிப்பிடுகின்றார். . (R)
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026