Freelancer / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கான கள விஜயம் ஒன்றினை நேற்று (11) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்கொண்டனர்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு செல்கின்ற பாதையின் இருமருங்கிலும் அமையப் பெற்றுள்ள தற்காலிகக் கடைத்தொகுதிகள் கோணேஸ்வர ஆலயத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இடையூராக உள்ளதாகவும், அதனை பொருத்தமான இடத்துக்கு அப்புறப்படுத்துமாறு ஆலயப் பரிபாலன சபை உட்பட பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கைகள் முன்வைத்ததனையடுத்து, அவற்றை குறித்த தரப்புகளோடு கலந்துரையாடி சாதகமான தீர்வுகளை வழங்குவதே அமைச்சர்களின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
ஆலயப் பரிபாலன சபை மற்றும் வர்த்தக சங்கத்தினருடன் அமைச்சர் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், குறித்த கடைத்தொகுதிகளை அப்பிரதேசத்திலிருந்து அகற்றி இன்னுமொரு இடத்தில் அமைப்பதற்கான இரண்டு இடங்களை நேரடியாகச் சென்று அமைச்சர் உட்பட அதிகாரிகள் அவதானித்ததுள்ளனர். (a)


4 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
09 May 2026
09 May 2026