2025 மே 05, திங்கட்கிழமை

கோதுமைக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதித்து விதிக்கப்பட்ட உரிமம் வழங்கும் முறையை இல்லாதொழிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனினும், கோதுமை மா இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக  அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஆலோசகர் பெரகும்  அபேசேகர இன்று (30)   தெரிவித்தார்.  

கோதுமை மா இறக்குமதி வரி கிலோ கிராம் ஒன்றுக்கு 16 ரூபாவாக இருந்த நிலையில் அது 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக  அபேசேகர தெரிவித்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்திய கோதுமை மாவின் இறக்குமதியை தடைசெய்தது, இதன் காரணமாக கோதுமை மாவின் விலை அதிகரித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X