2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கோ​ட்டாவுக்கு எதிராக வழக்கு; தொடர் விசாரணைக்கு ஏற்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதமுலனயிலுள்ள டீ.ஏ.ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக, 49 மில்லியன் ரூபாயை முறையற்ற வகையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு நீதாய மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு, இன்று (09) தீர்மானித்தது.

அந்த வகையில், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல், இந்த வழக்கு, தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென, நீதிபதிகள் குழு அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .