2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கொட்டாவை - கடவத்தையிடையே கட்டணமில்லை

Thipaan   / 2016 மே 17 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவை மற்றும் கடவத்தைக்கு இடையிலான பகுதியிலுள்ள நுழைவாயில்களில், வாகனங்கள், இலவசமாகப் பயணிக்க முடியுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்நடைமுறை அமுலிலிருக்கும் எனவும் அச்சபை தெரிவித்துள்ளது.

கொட்டாவையிலிருந்து கடவத்தை வரையான பகுதியின் அத்துருகிரிய, கடுவெல, கொத்தலாவெல ஆகிய பகுதிகளிலேயே இலவசமாகப் பயணக்க முடியுமென, அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக, கடுவெலயின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X