2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கைதிகளின் விடுதலை விவகாரம்: ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்பட்டது

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறித்து, ராவணபலய அமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெறவிருந்த சந்திப்பு, வெள்ளிக்கிழமைக்கு (27) பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணபலய அமைப்பு  நேற்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றிருந்தது.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொண்டு மகஜரொன்றையும் கையளிக்க திட்டமிட்டிருந்தநிலையில், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்தே, ஜனாதிபதியை  எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X