2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

குதிரை ஓடியவர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறையாக தோற்றவிருந்த பரீட்சார்த்தியொருவருக்கு பதிலாக போலியாக தோற்றிய 20 வயதான இளைஞன்,  கண்டி பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்தில் 11 ஆம் திகதி பகல் 11.50க்கு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்தமை, மற்றுமொருவர் சார்பாக தோன்றி மோசடியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர், கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரை, ஜனவரி 25ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, உண்மையிலேயே பரீட்சைக்குத் தோற்றவேண்டிய நபர் குறித்தும் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X