2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கே.பி.க்கு எதிரான மனு நவ. 12க்கு ஒத்திவைப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசத் தலைவர் என்று கூறப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணியின் விஜித்த ஹேரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலல்கொட, நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த பட்டியல் தொடர்பில் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக நான்கு அறிக்கைகள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த அறிக்கையின் நகல் இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என, இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறியுள்ளார்.

இதயைடுத்து, நவம்பர் 12ஆம் திகதி வரை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு முன்னதாக அந்த அறிக்கையை பெற்றுக் கொடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலல்கொட அரச தரப்பு சட்டத்தரணிக்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மனு அடிப்படையில் கே.பி தொடர்பில் 193 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 193 சம்பவங்கள் தேசிய மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பில் உள்ளன. விசேடமாக ராஜீவ் காந்தி கொலை, கப்பல் கொள்வனவு, தொழிற்சாலை, நிதி கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல சம்பவங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

கே.பி என்பவர் பல பெயர்களில் வெளிநாடுகளில் வாழ்ந்தவராவர். அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகிப்பதில் பிரதான பங்குவகித்தவர் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தில் மலேசியாவில் வைத்து அவர், கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார். தற்போது அவர், முல்லைத்தீவில் சிறுவர் இல்லமொன்றையும் நடத்திவருகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .