2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

க.பொ.த (சா/த) பரீட்சை இன்று ஆரம்பம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, இன்று (06) நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப் பரீட்சையில் 7 இலட்சம் மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும்  இதற்கென 5,669 பரீட்சை நிலையங்களும் 538 மத்திய நிலையங்களும் தவிர இணைப்பு நிலையங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக நடைபெறவுள்ள இப் பரீட்சையில் 65,524 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இப்பரீட்சையின் போது ஏற்படும் சிரமங்கள் மற்றும் இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, காலை 8 மணிக்கு முன்னதாவே, பரீட்சை நிலையங்களுக்குச் சமுகமளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றின் ஊடாகத் தமது அடையாளத்தை பரீட்சாத்திகள் உறுதிப்படுத்துவது கட்டாயம் எனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை நிலையங்களுக்குள்ளே அலைபேசியை உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை மீறும் பரீட்சாத்திகளுக்கு, 5 வருடங்கள் பரீட்சைத் தடை விதிக்கப்படுமெனச் சுட்டிக்காட்டிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், ஆள்மாறாட்டம் செய்வோர் உடன் கைதுசெய்யப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பரீட்சைகள் முறைகேடுகள் தொடர்பாக 1911 என்ற அவசர இலக்கத்தினூடாக அல்லது 0112784208, 0112784537, 0113140314, 0113188350 ஆகிய இலங்கங்களினூடாகத் அறியத்தருமாறு, பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சாத்திகள், தமக்கான தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான இறுதிச் சந்தர்ப்பத்தை, ஆட்பதிவுத் திணைக்களம் நேற்றைய தினம் (05) வரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .