2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு

Thipaan   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ். செல்வநாயகம்

புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03) சமர்ப்பித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்னவும், கே.பி.யிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

நீதியரசர்களான விஜித் கே.மலல்கொட, தேவிகா தென்னகோன் அடங்கிய குழு, வழக்கை எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்கும்படி, மக்கள் விடுதலை முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஆணைகோரும் மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X