Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிரியவிலுள்ள தேயிலை தோட்டமொன்றில் பெண்ணின் தங்க நகையை கொள்ளையிட்ட சந்தேகநபரை சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் கைதுசெய்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, வேறு சம்பவமொன்றில் கைதாகி பிணையில் விடுதலையான நபரே இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
'மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், கைக்குட்டையால் தனது முகத்தை மூடி, பெண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
அதன்போது கால் தடுக்கி கீழே விழுந்து, மீண்டும் எழுந்து பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்' என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர், சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கீழே விழுந்து கிடந்த அடையாள அட்டை என்பவற்றை கொண்டு சந்தேகநரை கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கொழும்பு மற்றும் கல்கிஸை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற திருட்டு, கொள்ளை மற்றும் ஹெரோய்ன் வியாபாரம் உள்ளிட்ட 39 குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
13 minute ago
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
21 minute ago