2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குளத்தில் விழுந்த 13 பேரைக் காத்த இளைஞர்கள்

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளத்துக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டியிலிருந்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த 13 பேரை அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து காப்பாற்றியுள்ள சம்பவம் கந்தளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் எண்மர், பெண்கள் மூவர் மற்றும் 6 மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு குளத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் பயணித்த பஸ், கோளாறு காரணமாக இடைநடுவில் நின்றமையினால், குறித்த முச்சக்கரவண்டியில் இவர்கள் பயணத்தை தொடர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டுள்ள 6 மாதக் குழந்தை மாத்திரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது. 

மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X