2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு

Kanagaraj   / 2016 நவம்பர் 02 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி நகரத்தில் 2016 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் 74 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் 122 பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .