2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பொலிஸ் உயரதிகாரியை கைது செய்ய உத்தரவு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரி ஒருவரை கைதுசெய்யும்படி சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் புதையில் தோண்டிய குற்றச்சாட்டில் கோடீஸ்வர வர்த்தகர் உட்பட 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் ஒரு குழுவினர் புதையல் தோண்டுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் அதிகாரி குழுவினர், சந்தேகநபர்களை கைதுசெய்ய சென்றபோது, அங்கு வந்த குறித்த பொலிஸ் அதிகாரி அவர்களை கைது செய்யவதை தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரகளை கைதுசெய்யாத சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .