2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொழும்பில் இன்றுமுதல் வேட்டை

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ், இன்று திங்கட்கிழமை (15) முதல், விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய படையணி மூலம், இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்புத் தரப்பினர், தேவையேற்படின், விமானப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்றனர். போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், ஒரு மாதத்தின் பின்னர் ஆராய்வர்.

அதன் பின்னரே, இரண்டாவது மாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், அதன்போது, முதல் மாதத்தை விட அதிக-ளவிலாள படையினர், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .