2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கெஹெலியவின் மகனுக்கு பிணை

George   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், நேற்று வியாழக்கிழமை (22)அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மது போதையில் சென்றே, அவர் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று, வைத்திய பரிசோதனையின் மூலம் தெரியவந்ததாகக் கூறிய கறுவாத்தோட்டம் பொலிஸார், அவரை, எதிர்வரும் 27ஆம் திகதியன்று, நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வரான, ரமித் ரம்புக்வெல்ல பயணித்த கார், கொழும்பு 07, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைத்தடாக மாநாட்டு மண்டபத்துக்கு அருகிலான மகளிர் பாடசாலையொன்றின் மதில் சுவருடன் மோதி, நேற்று அதிகாலை, விபத்துக்குள்ளானது.

விபத்தை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், அவரைக் கைது செய்ததுடன், வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, அவர் மதுபோதையில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மதுபோதையில் வேகமாக வாகனத்தைச் செலுத்தியதிலேயே, இந்த விபத்து சம்பவித்ததாகக் கூறிய பொலிஸார், ரமித் ரம்புக்வெல்லவை, பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .